முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுப்பாளையம் - கோவை இரட்டை இருப்புப் பாதை : ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Train-2023-05-01

புது டெல்லி, மேட்டுப்பாளையம் - கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல் முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எல். முருகன் வெளியிட்டுள்ள பதிவில், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில்நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான மனுவை,  ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வழங்கினேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து