முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/- லிருந்து, ரூ. 16,796/- ஆகவும், ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ. 10,656/-லிருந்து ரூ.16.585/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை முதல்வர், போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான,  சிவக்குமாரிடம் முதல்வர்  அலுவலகத்தில் நேற்று  வழங்கினார்.

இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதல்வர்  தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்)  வி.கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து