முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 நாட்களில் 10-வது சம்பவம்: பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Bihar 2024-07-03

பாட்னா, பீகார் மாநிலத்தில் நேற்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது கடந்த 15 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 10-வது பாலம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் மட்டும்  இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  

நேற்று முன்தினம் சரண் மாவட்டத்தில் 2 சிறிய பாலங்கள் இடிந்து விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 நாட்களில் பீகாரின் மதுபானி, அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட10 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த நிகழ்வுகளை விசாரிக்க பீகார் அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித்துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து