முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை, வெள்ளம்: தெற்கு பிரேசிலில் 180 பேர் பலி

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      உலகம்
Brazil 2024-07-02

Source: provided

பிரேசிலியா: தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்ட் டு சுல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29-ம் தேதி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் நாடு முழுவதும் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த ஒரு வாரமாக வெள்ளம் சற்று குறையத் தொடங்கிய நிலையில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. கனமழை, நிலச்சரிவால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் இதுவரை 180 பலியான நிலையில், 33 பேர் மாயமாகியுள்ளனர்.

மாநிலத் தலைநகர் போர்டோ, அலெக்ரே உள்பட 478 நகரங்களில் சுமார் 23,98,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.50,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக அந்நாட்டு அரசு சுமார் 15.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக சமூக தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.

ஆர்ஜெண்டினா மற்றும் உருகுவே எல்லையில் அமைந்துள்ள ரியோ கிராண்ட் டு சுலில் விவசாயம் மற்றும் மின்நிலையங்களை சார்ந்துள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட 89 ஆயிரம் மக்கள் மற்றும் 15 ஆயிரம் விலங்குகள் ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து