முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      உலகம்
Britain-election-2024-07-04

Source: provided

லண்டன்: பிரிட்டனில் நேற்ற நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டுள்ளனர்.

பிரிட்டனின் புதிய அரசைத் தீர்மானிக்கக் கூடிய இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையில்(ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) உள்ள 650 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு கட்சிகள் சார்பிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட முன்பைவிட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பிரிட்டனில் குடியேறிவர்களுக்கும், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன்ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆளும் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து