முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையான போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது.

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் 'அக்டோபர்-7' தாக்குதலை அடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் காசாவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல் அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கிடைக்கும் தகவலின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்துகிறது. இதனால் உயிர்ப்பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 38,011 ஆக உயர்ந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 9 மாதங்களாக நடக்கும் இந்த சண்டையில் 87,000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து