முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தற்போது வறுமை குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி:  2011 - 2012 ம் ஆண்டு இந்தியாவில் 21 சதவீதமாக இருந்த வறுமை, 2022- 24 ல் 8.5 சதவீதமாக குறைந்து உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சோனால்டி தேசாய் தலைமையிலான என்சிஏஇஆர் என்ற அறிவு சார்ந்த பொருளாதார அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை 'Rethinking Social Safety Nets in a Changing Society' என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்திய மனித வளர்ச்சி கணக்கெடுப்பு (ஐஎச்டிஎஸ்) அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஐஎச்டிஎஸ் அடிப்படையில், இந்தியாவில் வறுமை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2004 - 2005 ல் 38.6 சதவீதமாக இருந்த வறுமை, 2011- 12 ல் 21.2 சதவீதமாக குறைந்தது. இது, கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய சவாலுக்கு மத்தியிலும் 2022- 2024 ல் மேலும் குறைந்து 8.5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைவு ஆகியவை வேகமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும் ஒரு சூழலை உருவாக்குகிறது.

பொருளாதார வளர்ச்சியின் சகாப்தத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும் போது நீண்ட காலமாக இருக்கும் வறுமை குறைய கூடும். வறுமையில் இருக்கும் மக்களை பொருளாதாரத்தில் உயர்வதற்காக வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இதனால், வறுமை கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து