முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Jail

Source: provided

பெங்களூரு: கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்தவர் மருந்தக ஊழியர் ரேணுகாசாமி (வயது 33). இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் பெங்களூருவில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அன்னபூர்ணேஸ்வரிநகர் போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். இதில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையிலும், மீதமுள்ள 4 பேர் துமகூரு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடாவை குடும்பத்தினர் மற்றும் நடிகர்கள் சிலர் வந்து சந்தித்து செல்கின்றனர். சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில் நேற்றுடன் நீதிமன்றம் காவல் முடிவடைந்தநிலையில், நேற்று நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் காணொலி காட்சியின் மூலம் பெங்களுர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது 17 பேரையும் வரும் ஜூலை 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து