முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தினருடன் இணைந்து பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      விளையாட்டு
4-Ram-53

Source: provided

புதுடெல்லி: குடும்பத்தினருடன் இணைந்து பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்தியா வருகை...

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டனர். இந்த நிலையில், நேற்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

குடும்பத்தினருடன்...

இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதில் ஜஸ்பிரித் பும்ரா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து பிரதமருடன் புகைப்படம் எடுத்தார்.

ரவீந்திர ஜடேஜாவும்...

அதேபோல் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜாவும் தனது மனைவியுடன் இணைந்து பிரதமருடன் புகைப்படம் எடுத்தார். அவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்கும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து பிரதமருடன் இணைந்து புகைப்படம் எடுத்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து