முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு வரவேற்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      விளையாட்டு
4-Ram-58-3

Source: provided

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பார்படாஸில் சிக்கி தவித்தனர். 

பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர். இந்த நிலையில், நேற்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் புடை சூழ திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணித்தனர்.

ஆஸி. வாரியம் விருப்பம்

இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரை 2012 - 13-க்குப் பிறகு ஆடவே இல்லை. இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே சந்திக்கின்றன. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடரை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு அந்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருமண நாள் கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில், நேற்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

ஹர்திக் பாண்ட்யா சாதனை

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் டி20 போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 2 இடங்கள் முன்னேறி, முதல்முறையாக 'நம்பர் 1' அரியணையில் ஏறியுள்ளார்.

முதலிடத்தை இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்காவுடன் இணைந்து பகிர்ந்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீரர்களில் அவரும் ஒருவர். இதனால் இத்தகைய ஏற்றம் கண்டுள்ளார்.மேலும் இதன் மூலம் எந்த இந்திய வீரரும் படைத்திராத சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார். டி20 வரலாற்றில் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து