முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் முறைகேடு விவகாரம்: ஜார்க்கண்டில் முக்கிய நபர் கைது

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Jail

புது தில்லி, ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை ஜார்கண்ட் மாநிலத்தில் சிபிஐ கைது செய்தது. 

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதோடு, நீட் விடைத்தாள் நகலை என்டிஏ தர மறுப்பதாக புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையையும் சுப்ரீம் கோர்ட் வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வைத்து சிபிஐ கைது செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக வெள்ளிக்கிழமை, ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பணியாற்றிய டாக்டர் எஹ்சான் உல் ஹக் மற்றும் இம்தியாஸ் ஆலம் ஆகிய 2 பேரை சிபிஐ கைது செய்தது.பிகார் மாநிலம் பாட்னாவில் மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதை சிபிஐயின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் பாட்னாவில் இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அசுதோஷ், மாணவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை ஏற்பாடு செய்து கொடுப்பது, ​​மற்றொரு நபரான மணீஷ், தேர்வர்களை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என சிபிஐ அதிகாரி தெரிவித்தனர். கடந்த மாத தொடக்கத்தில், நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விரிவான விசாரணையை சிபிஐக்கு மத்திய அரசு ஒப்படைத்தது. அதன்படி, தேர்வு வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முறைகேடுகள் தொடர்பாக பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இது நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களைத் தூண்டியது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேசிய தேர்வு முகமை கலைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்  கோடைக்கால விடுமுறை முடிவடைந்து ஜூலை 8 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், நீட் முறைகேடு வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து