எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரேசிலியா, பிரேசிலில் டுவிட்டர் வலைதளத்திற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் இந்த உத்தரவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா அதிபராக பதவியேற்பதை தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா என பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே சமயம், சமூக வலைதளமான டுவிட்டர் தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார் என பிரேசில் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றம் சாட்டினார்.
மறுபுறம், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்திருந்தார். அதோடு, பிரேசிலில் டுவிட்டர் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள டுவிட்டர் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் டுவிட்டர் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் டுவிட்டர் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் டுவிட்டர் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் டுவிட்டர் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் டுவிட்டர் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 24 மணி நேரத்திற்குள் டுவிட்டர் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் உத்தரவிட்டார்.
மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் டுவிட்டர் செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என். மூலம் டுவிட்டர் செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் தெரிவித்தார்.
இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க், சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார் என்று விமர்சித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 22 hours ago |
-
காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு : தமிழக காவல்துறை எச்சரிக்கை
30 Oct 2024சென்னை : காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பதியப்படும் என்று தமிழக காவல்துறை எச்சர
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
மதுரை செல்லூரில் ரூ.11.9 கோடியில் 290 மீட்டர் நீளத்திற்கு புதிய கால்வாய் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
30 Oct 2024சென்னை : மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.
-
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
30 Oct 2024மேட்டூர், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,568 கனஅடியாக சரிந்தது.
-
தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு
30 Oct 2024மதுரை, தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
-
தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 Oct 2024சென்னை, தீபாவளி தினமான இன்று தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு சிகிச்சை
30 Oct 2024பெங்களூரு : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.
-
இன்று தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
30 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சென்னை புறநகர் ரெயில் சேவையில் இன்று மாற்றம்
30 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
30 Oct 2024மதுரை, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
30 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தீபாவளி பண்டிகை: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Oct 2024சென்னை : இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க.
-
கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
30 Oct 2024சென்னை : கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானில் பெண்களுக்கு தலிபான்கள் புதிய உத்தரவு
30 Oct 2024காபூல் : ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
-
திடீர் வெள்ளம்: ஸ்பெயினில் 51 பேர் பலி
30 Oct 2024மாட்ரிட் : ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.75.85 கோடி மதிப்பில் விருதுநகரில் கூட்டுக்குடிநீர் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
30 Oct 2024சென்னை : வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ.
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
30 Oct 2024சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர்: முத்துராமலிங்கத்தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
30 Oct 2024கமுதி : வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரான்ஸ் தூதரிடம் கைவரிசை: டெல்லியில் 4 திருடர்கள் கைது
30 Oct 2024புதுடெல்லி : டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சவுக் சந்தையில், பிரான்ஸ் துாதர் தியரி மாத்துவிடம் மொபைல் போனை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 Oct 2024மதுரை : மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Oct 2024மதுரை, மதுரையில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
30 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்திற்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
30 Oct 2024சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு மர்ம இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.