முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்திற்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
Chennai-Airport 2024-08-27

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு மர்ம இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய கழிவறையில் திரவ வடிவிலான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம இமெயில் வந்துள்ளது.

இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து