முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'அமைச்சரவையில் பங்கு' திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் சலசலப்பு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan 2023 07 30

Source: provided

சென்னை : அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று தான் பேசிய வீடியோவை திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து 

தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் பரபரப்பையும், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார். திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1999-ல் விசிக இந்த கோரிக்கையை முன் வைத்துதான் அரசியலில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. யாருக்கு என்ன செய்தியை சொல்ல பழைய வீடியோவை தலைவர் திருமாவளவன் தற்போது பகிர்ந்துள்ளார் என்றும் திமுகவிற்கு மறைமுகமாக தனது கோரிக்கையை வைக்கிறாரா திருமாவளவன்? என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் தொண்டர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து