முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுமொத்த வியாபாரிகளையும் அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர் : மதுரையில் நடிகர் கருணாஸ் பேட்டி

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      தமிழகம்
Karunas 2024-09-14

Source: provided

மதுரை : ஒட்டுமொத்த வியாபாரிகளையும் நிதியமைச்சர் அவமானப்படுத்தியுள்ளார் என்று மதுரையில் நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்.

அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து முன்னேறியுள்ளார். நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து