முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2 தேர்வு முடிவு எப்போது? டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதில்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதற்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் பதிலளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை கூடுதல் அலுவலர், உதவி பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 பணி இடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., முதல் நிலை எழுத்துத்தேர்வு நேற்று தொடங்கியது. 2,763 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது.

சென்னையில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையத்துக்குச் சென்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் எஸ்.கே. பிரபாகர் பார்வையிட்டார். பின்னர் அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது; நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றன. முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம். தேர்வு நடைமுறைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.

சென்னையில் மட்டும் 251 மையங்களில் குரூப் 2, குரூப் 2A நடக்கிறது. தமிழகத்தில் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்த 2 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து