முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.நீ.ம. தலைவராக மீண்டும் தேர்வு: கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-Kamal-2024-03-30

Source: provided

சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமல்ஹாசன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து