முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்திற்கு எதிராக எல்லைகளின் மறுபக்கத்திற்கும் சென்று தாக்குதல் நடத்துவோம்: ராஜ்நாத்சிங் பேச்சு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Rajnath-Singh 2023-11-14

ஸ்ரீநகர், பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் எல்லைகளின் மறுபக்கத்திற்கும் சென்று தாக்குதல் நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

 ஜம்மு காஷ்மீர், பந்திபோரா மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல், சாதாரண தேர்தல் அல்ல. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் வலிமையை நிரூபிக்கும் தேர்தல். ஓட்டளிக்காமல் ஒரு நபர் கூட எஞ்சியிருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். 

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, மக்கள் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்றனர். தற்போது ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.  காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தான் நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் நமது உறவில் விரிசல் ஏற்பட்டது ஏன் என்பதை உணர வேண்டும். நாம் அனைவரும் அண்டை வீட்டார். இந்தியாவுடன் நல்லுறவை பேணியிருந்தால் பாகிஸ்தான் சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐ.எம்.எப்.,) கேட்பதை விட, பல மடங்கு அதிக நிதி வழங்கியிருப்போம். 

கடந்த 2014-15ம் நிதியாண்டில் காஷ்மீர் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ரூ. 90 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். இந்த நிதியானது, நீங்கள் ஐ.எம்.எப்.,பிடம் இப்போது கேட்பதை விட பல மடங்கு அதிகம்.  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது போல, நமது நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நமது அண்டை வீட்டாரை ஒருபோதும் மாற்றிக் கொள்ள முடியாது என்றார். 

அவரின் இந்த கூற்றை உணர்ந்து இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது ஒரு புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விடக் கூடாது.  பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் எல்லைகளின் மறுபக்கத்திற்கும் சென்று தாக்குதல் நடத்துவோம். 

எல்லையின் மறுபுறத்தில் அமர்ந்து, இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிடுபவர்களுக்கு, இந்தியாவில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்குவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து