முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை மாத பிறப்பு: பழனி கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      ஆன்மிகம்
Palani 2024-11-17

Source: provided

பழனி : தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேற்று முன்தினம் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவர்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் ரோப்கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின்இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல காத்திருந்தனர். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து