முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எக்ஸ் தள ஓனர் எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      உலகம்
Elon-Musk 2024 11 17

Source: provided

பிரேசில் : எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையொட்டி ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசினார். அப்போது திடீரென அங்குக் கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. உடனே ஜன்ஜா டா சில்வா, "இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்" என்று கிண்டல் செய்தார். தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற கூறிய அவர், மஸ்க்கை கெட்ட வார்த்தையிலும் திட்டினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், எலான் மஸ்க் தனது மற்றொரு பதிவில், "ஜன்ஜா டா சில்வாவின் கணவரும் பிரேசில் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூயிஸ் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரேசிலில், இந்தாண்டு ஒரு மாதத்திற்கு மேலாக எக்ஸ் சமூக வலைத்தளம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலைமையில் எலான் மஸ்க்கை பிரேசில் அதிபரின் மனைவி கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மஸ்க்கும் பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் அடுத்த தேர்தலில் தோற்று போவீர்கள் என பதிலளித்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற பின்னணியில் இருந்து எலான் மஸ்க் உதவினார் என்ற செய்தி பரவலாக பரவி வந்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டின் தேர்தலிலும் அவர் ஆதிக்கம் செலுத்த கூடும், எனுமளவுக்கு அவருடைய எக்ஸ் தள பதிவு அமைந்துள்ளது என அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து