முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியில் சாய் சுதர்சன்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      விளையாட்டு
Sai-Sudarsan 2024-11-17

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ,பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது .முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு திடீரென முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதனால் களத்தில் இருந்து அவர் உடனடியாக வெளியேறினார். இரு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயத்தை சந்தித்து வருவதை அடுத்து இளம் வீரர்களான சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

_______________________________________________________________________

மீண்டும் பயிற்சியில் ராகுல்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ,பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது . இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடமாட்டார்கள் என கூறப்பட்டது .  இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில், கே.எல்.ராகுல் மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்டில் விளையாடுவது உறுதியாகி உள்ளது . இது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

_______________________________________________________________________

இறுதிப்போட்டியில் பிரிட்ஸ்-சின்னர் 

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் மற்றும் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் டெய்லர் பிரிட்ஸ் - ஜானிக் சின்னர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து