முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வரலாற்றில் முதல்முறை: நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Hypersonic 2024-11-17

Source: provided

ஒடிஸா : இந்திய வரலாற்றில் முதல்முறையாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதல் சோதனை ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1,500 கி.மீ. தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை பொருந்தியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால்(டிஆர்டிஓ) இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த சோதனை மூலம், நெடுந்தொலைவு சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ‘ஹைப்பர்சோனிக் திட்டம்’ இந்திய வரலாற்றில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும்(டிஆர்டிஓ), பாதுகாப்புப் படைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சமூகவலைதளத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பறக்கவிட்டு இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. சரித்திர சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு வரலாற்று தருணம். நமது ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறை அபார சாதனைக்காக, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து