முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார் புதிய மேல்சாந்தி : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      ஆன்மிகம்
Sabarimala 2024-11-16

Source: provided

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி நேற்று அதிகாலை நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்  ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம்(நவ.15) மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி மகேஷ்நம்பூதிரி நடை திறந்து விபூதி பிரசாதங்களை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மஞ்சள்மாதா, கணபதி, நாகராஜா உள்ளிட்ட பரிவார கோயில்களின் சந்நதிகளும் திறக்கப்பட்டன.  பின்பு ஐயப்பன் கோலிலில் இருந்து விளக்கு எடுத்துச் செல்லப்பட்டு 18-ம்படிக்கு கீழ்பதியில் உள்ள கற்பூர ஆழியில் ஜோதி ஏற்றப்பட்டது.

சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் கோவில் புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன்நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். பின்பு பூஜைகள் எதுவுமின்றி இரவு 11 மணிக்கு நடைசாத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு மண்டல காலத்துக்கான முதல்நாள் வழிபாடு தொடங்கியது. இதற்காக புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்தார். சூரியஉதயத்துக்கு முன்பு செய்யப்படும் உஷபூஜையினை தந்திரி கண்டரரு ராஜீவரு மேற்கொண்டார்.

பின்பு நைவேத்தியமாக இடித்து பிழிந்த கேரள பாயாசம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. 

இந்நிலையில் இங்கு இலவச சிகிச்சை மையத்தினை தேவசம்போர்டு தலைவர் பிஎன்.பிரசாந்த் தொடங்கி வைத்தார். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து