முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
Delhi-2024-10-02

புதுடெல்லி, டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 கிலோ கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டெல்லியின் தெற்கு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ கொகைன் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட முயன்ற 4 பேரையும் கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திலக் நகர் பகுதியில் 400 கிலோ ஹெராயின் மற்றும் 160 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆப்கனை சேர்ந்த இருவரை கைது செய்தனர். அதேநாளில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள 1,660 கிராம் கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, லைபீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது இது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து