முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி20 குழுப் புகைப்படத்தில் இடம்பெறத்தவறிய அமெரிக்க அதிபர் பைடன், கனடா அதிபர்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      உலகம்
Modi 2024-11-19

பிரேசிலியா, ஜி20 குழுப் புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் பைடன், கனடா அதிபர் இடம்பெற தவறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சில நடைமுறைச் சிக்கல்களால், குழுப் புகைப்படத்தில் இடம்பெற ஜோ பைடன் தவறிவிட்டதாக அதிருப்தியடைந்த அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த குழுப் படத்தில் இடம்பெறத் தவறியது இவர் மட்டுமல்ல, கனடா மற்றம் இத்தாலிய பிரதமர்களும்தான்.

ரியோடி ஜெனிரியோவில் உள்ள நவீன கால கலை அருங்காட்சியகத்தின் பின்னணியில் குழுப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர், பிரெஞ்ச் அதிபர் என பல உலகத் தலைவர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்டு குழு புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தனர். குழுப் புகைப்படம் எடுக்க அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்திருந்த தலைவர்கள் பலரும் தங்களுக்குள் நகைச்சுவையாகப் பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

ஜி20 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபரும், கனடா பிரதமரும் ஓரிடத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் குழுப் புகைப்படம் எடுக்கும் இடத்துக்கு வந்துகொண்டிருந்தபோதே, புகைப்படம் எடுக்கும் பணி முடிந்து தலைவர்கள் பலரும் அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனர் என்பதை அறிந்தனர். சில நடைமுறைச் சிக்கல்களால், அனைத்துத்தலைவர்களும் வருவதற்குள் புகைப்படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதில் பல தலைவர்கள் இடம்பெறவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து