முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்களுக்கு பிறகு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      தமிழகம்
Koorala-Falls 2024-07-14

தென்காசி, குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையானது 4-வது நாளாக நீடித்தது. எனினும் இந்த அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் நீர்வரத்து சீராக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து