முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரேகட்டமாக 288 தொகுதிகளில் நடக்கிறது: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : ஜார்கண்டில் 38 தொகுகளில் 2-ம் கட்ட தேர்தல் - வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      இந்தியா
Maharashtra-1 2024-11-18

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்த நிலையில் 2 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஜார்கண்டில் 38 தொகுதிகளுக்க 2-ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

288  -சட்ட சபை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் இன்று ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. மராட்டியதில் பாஜக, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மகாராஷ்டிராவில் அனல் பறக்க பிரசாரம் நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேறுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் நடைபெறும் சட்டசபை தேர்தல் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் 4,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 9 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க வசதியாக ஒரு லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அங்கு 2-வது கட்டமாக இன்று 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்கண்டில் இன்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் உள்ளார். இங்கு ஆளும் இன்டியா கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும்  பணி வரும் 23-ம் தேதி நடக்கிறது. அன்றே முடிவுகள் வெளியாகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து