முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தமிழகம் முழுவதும் வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் அமைக்கப்படும் நிவாரண முகாம்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகள் மூலம் மீட்பது, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு கொடுக்கப்பட்டு எவ்வாறு துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து