முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 முனை போட்டியில் வெல்லப்போவது யார்? - அரியானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : 90 தொகுதிகளில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      இந்தியா
Election 2023-11-06

Source: provided

சண்டிகர் : அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளில் இன்று  ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 முனை போட்டி நிலவும் அரியானாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

பா.ஜ.க. தனித்து... 

அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அங்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அதே போல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், 2 கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

1031 வேட்பாளர்கள்... 

அரியானாவில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இங்கு 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள்.

தீவிர பிரச்சாரம்... 

இங்கு கடந்த சில நாட்களாக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் யமுனா நகர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், ஹேமா மாலினி ஆகியோர் குருஷேத்ராவில் தீவிர பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிவானி மற்றும் ஜிந்த் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்க்கி தத்ரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி இங்கு 4 பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார்.

பிரசாரம் ஓய்ந்தது...

கடைசிநாள் பிரச்சாரமான நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

கருத்து கணிப்புகள்...

தேர்தல் பிரச்சார காலம் முடிவடைந்ததால், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஏஜென்ட்டுகள் தவிர வாக்காளர்கள் அல்லாத அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதிகளை விட்டு வெளியேறும்படி அரியானா தலைமை தேர்தல் ஆணையர் பங்கஜ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்தபின் அரை மணி நேரத்துக்கு பின்பே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

வாக்கு எண்ணிக்கை...

அரியானா மாநிலத்தில் இன்று தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அரியானாவில் இப்போது நிலவும் அரசியல் களம் இதுதான். அங்கு அரசியல் களம் பரபரப்பானதாக மாறியுள்ள நிலையில், யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது அக். 8 தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து