முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.150 அதிகரிப்பு : ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுகு மற்றும் கொண்டைக் கடலைக்கான எம்.எஸ்.பி. முறையே குவிண்டாலுக்கு ரூ.5,950 ஆகவும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300, கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு 210 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 275 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.6,700-க்கு கொள்முதல் செய்யப்படும். பார்லி குவிண்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.1,980 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குங்குமப்பூ குவிண்டாலுக்கு ரூ.140 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.5,940 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து