முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கனமழை: 10 விமானங்கள் - 4 விரைவு ரெயில்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : சென்னையில் கனமழை காரணமாக 10 விமானங்கள், 4 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி விரைவு ரெயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை சென்ட்ரலுக்கு பதில் இன்று இரவு சில ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு, மேட்டுப்பாளையம், கோவை ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும். பெங்களூரு, மங்களூரு, திருவனந்தபுரம் ரெயில்கள் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும். ஜோலார்பேட்டை, ஆலப்புழா விரைவு ரெயில்கள் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்படும். பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் தெற்கு ரெயில்வே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 14 விமானங்களின் சேவை தாமதமாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து