முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தராமையா நில வழக்கு: மூடா தலைவர் திடீர் பதவி விலகல்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Siddaramaiah 2024-10-16

Source: provided

பெங்களூர் : கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் நிலம் தொடர்பான  முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (மூடா) நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். லோக்ஆயுக்தா அமைப்பின் மைசூரி கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாட்சிகளை அழித்ததாக அமலாக்கத்துறையும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

1983-ல் இருந்து மாரி கவுடா சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு பதவிகள் வகித்தவர். மைசூரு தாலுகா பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டில் டவுண் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தார். அதன்பின் 8 வருடம் கழித்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். மாரி கவுடா ராஜினாமா குறித்து சித்தராமையா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. 

மைசூரு நகர்ப்புற திட்டத்திற்கான ஒரு இடத்தை கொடுத்ததற்கான மதிப்புமிக்க இடத்தில் 14 மனைகள் சித்தராமையா மனைவி பி.என். பார்வதி பெயருக்கு ஒதுக்கபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்மூலம் மாநில அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மனைகள் தனது மனைவியின் சகோதரர் பரிசாக கொடுத்தது என சித்தராமையா தெரிவித்துள்ளார். இதற்கிடையே சித்தராமையா மனைவி 14 மனைகளையும் திருப்பி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பும் அதை திரும்பி வாங்க ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து