முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு முன்பாக டெல்லி மேயர் தேர்தல்?

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Delhi-Mayor 2024-10-16

Source: provided

புதுடெல்லி : டெல்லி மேயர் தேர்தல் தீபாவளிபண்டிகைக்கு முன்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்றது. பா.ஜ.க.வுக்கு 104 வார்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றின.

எனினும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதில், ஒரு கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் மோதி கொண்டன. 

இதற்காக ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார். இதன் பின்னர், 4-வது முயற்சியில் ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒபராய், பா.ஜ.க. வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். 

துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார். கடைசி நேரத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர். இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார். இந்த சூழலில், நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி நடக்கவிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், 6 மாத கால தாமதத்திற்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும்,  தீபாவளிக்கு முன்பாக இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தேர்தல் தேதியை முடிவு செய்யும் கோப்பு டெல்லியின் தற்போதைய மேயர் ஷெல்லி ஒபராய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மேயர் தேர்தலுக்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க. கட்சி வேட்பாளர்கள் ஏப்ரல் 13-ம் தேதியே வேட்புமனு தாக்கல் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து