முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்றுசெய்தியாளர்களைச் சந்தித்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

வரும் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ரேசனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ. 2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ. 3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதே போல் ரூ. 2500, ரூ. 2700, ரூ. 3500, ரூ. 3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ. 1000 சேர்த்து பெறுவர். 

உயர்த்தப்பட்ட உதவித் தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

விஜய் கட்சி மாநாட்டு பேனரில் ரங்கசாமியின் படம் இடம் பெற்றிருப்பது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, விஜய் மாநாட்டுக்கு வாழ்த்துகள். விருப்பம் உள்ளோர் பேனரில் என் படத்தை போடுகிறார்கள். அது அவர்கள் விருப்பம் என்று கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து