முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 17-ம் தேதி மேச்சேரியில் இ.பி.எஸ்.க்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2024-11-02

மேட்டூர், வரும் 17-ம் தேதி மேச்சேரியில் இ.பி.எஸ்.க்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட வடிநில வட்டத்தில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் விதமாக 565 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உபநீர் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நீரேற்று திட்டத்தின் மூலம் பயன்பெறும் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் வருகிற 17-ந்தேதி பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ. மணி, எம்.பி. சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து