முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      தமிழகம்
Koorala-Falls 2024-07-14

நெல்லை, நீர்வரத்து குறைய தொடங்கியதை தொடர்ந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.  

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 

தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இரவு முழுவதும் தொடர் நீர்வரத்தால் தடை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை மழை குறைவால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து