முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: ரத்து செய்த இந்திய அணி மீது சுனில் கவாஸ்கர் விமர்சனம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      விளையாட்டு
Gavaskar 2023-10-22

Source: provided

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த பி.சி.சி.ஐ.யின் செயலை கண்டித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

வரும் 22-ம் தேதி...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இந்தியா ஏ அணியுடன் ஆடவிருந்தது. அதை ரத்து செய்துள்ளது பிசிசிஐ அணி.

கவாஸ்கர் விமர்சனம்...

இதனை முன்னாள் வீரரும் தொடருக்கு பெயர் காரணமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியினை ரத்து செய்தது பிச்சைக்காரர்களின் நம்பிக்கை எனலாம். ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஆடுகளத்தின் நடுவில் நின்று நேரமெடுத்து பந்தினை நடு பேட்டில் அடிக்கும் உணர்வு எங்குமே கிடைக்காது. எவ்வளவுதான் வலைப்பயிற்சியில் பயிற்சி செய்தாலும் கிரீஸில் நின்று விளையாடும்போது வரும் பேட்டின் வேகம், அதன் இயல்பு தன்மை வேறெங்கும் கிடைக்காது.

ஆடுகளத்தில் வரும்... 

இந்திய அணி காயம் ஏற்படுவதால் விளையாடவில்லை எனக் கூறுவது சரிதான். ஏன் வலைப்பயிற்சியில் காயம் ஏற்படாதா? போட்டியில் விளையாடுவது போல் வராது. ஒருவர் வலைப்பயிற்சியில் விளையாடும்போது 3,4 முறை ஆட்டமிழந்தாலும் அடுத்து விளையாடலாம் என்ற எண்ணம் இருக்கும். ஒரு அழுத்தமும் இருக்காது. ஆனால் போட்டியில் அப்படியில்லை. அதேபோல பந்துவீச்சாளர்களுக்கும் முறையான ஓடும் முறை, நோ பால் வீசாமல் இருக்கும் கவனம், எந்த இடத்தில் பந்தினை ஃபிட்ச் செய்வது என ஆடுகளத்தில் விளையாடும்போதுதான் வரும். அந்த மனப்பாங்கும் கற்றலும் வலைப்பயிற்சியில் வரவே வராது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து