முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      இந்தியா
Modi-Rahul 2024-04-10

புது டெல்லி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர்  மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், நவீன இந்தியாவின் தந்தை, நிறுவனங்களை உருவாக்கியவர் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு. 

ஜனநாயக, முற்போக்கான, அச்சமற்ற, தொலைநோக்கு கொண்ட, அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான நேருவின் மதிப்புகள் நமது இலட்சியமாகவும் இந்தியாவின் அடிப்படையாகவும் இருக்கின்றன. அவை எப்போதும் அப்படியே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.  

சமூக, அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் தனது தொலைநோக்கு பார்வையுடனும் திறமையான தலைமைத்துவத்துடனும் இந்தியாவை முன்னெடுத்துச் சென்ற நேருவுக்கு வணக்கம் என தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவை பூஜ்யத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்றவர். நவீன இந்தியாவின் சிற்பி. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்தவர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை நாட்டிற்கு தொடர்ந்து வழங்கியவர். 

ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலரும், நமது உத்வேகத்தின் ஆதாரமுமான நேருவின் 135-வது பிறந்த நாளில், நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகூருகிறோம் என தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து