முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

144 தடை உத்தரவு மீறல் வழக்கு: இம்ரான் கானை விடுதலை செய்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      உலகம்
Imran-Khan 2

இஸ்லாமாபாத், 144 தடை உத்தரவு விதிமீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தானின் தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், அல்-காதிர் அறக்கட்டளை ஊழல், தோஷகானா ஊழல் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே பாகிஸ்தானில் பல்வேறு காலகட்டங்களில் தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சியினர் நடத்திய போராட்டங்களின் போது பொதுஒழுங்கை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

இது தொடர்பாக கடந்த 2022 ஆகஸ்ட் 20ம் தேதி தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், அவரது நெருங்கிய உதவியாளர்களான ஷேக் ரஷீத், ஆசார் கைசர், சைபுல்லா நியாசி, சதாகத் அப்பாசி, பைசல் ஜாவேத் மற்றும் அலி நவாஸ் ஆகியோர் மீது அப்வாரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பான வழக்கை  விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, 144 விதி மீறல் வழக்கில் இருந்து இம்ரான் கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து