முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை நியமித்தார் டிரம்ப்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      உலகம்
Tulsi-kaparti-2024-11-14

வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டை நியமனம் செய்துள்ளார் டிரம்ப். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது அமைச்சரவை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அவ்வகையில், முன்னாள் எம்.பி. துளசி கபார்டை (43) தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இது வரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பகவத் கீதையை முன்வைத்து வாசித்து அமெரிக்க பெண் அதிகாரி துளசி கபார்டு உறுதிமொழி எடுத்து பதவியேற்றார்.

இது குறித்து டிரம்ப் கூறும் போது, 

முன்னாள் எம்.பி.யான, லெப்டினன்ட் கர்னல் துளசி கபார்டு, தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார். 

அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றார். 

ஜனநாயகக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான துளசி கபார்டு, 2022-ம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகினார். 2024-ம் ஆண்டில் குடியரசு கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 

20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்டு முக்கியமானவர். பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். 

டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். கமலா ஹாரிசுடன் டிரம்ப் நேருக்கு நேர் விவாதம் நடத்தவும் துளசி உதவி செய்தார். அவரது செயல்பாடுகள் டிரம்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு நாட்டின் மிக முக்கிய பதவியான உளவுத்துறை இயக்குனர் பதவியை வழங்கி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து