முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டம் விட்டு கண்டம் பாயும் வுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்ய படை தாக்குதல்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      உலகம்
Russia-attack-2024-11-21

கீவ், போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷியா, தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கைக்கு ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக வடகொரிய ராணுவ படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, ரஷியாவின் அஸ்திராகான் பகுதியில் இருந்து உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டிரிப்ரோ நகரை குறிவைத்து ஐ.சி.பி.எம். ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷியா இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என்பவை 5,000 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளாகும். நீண்ட தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷியா அணு ஆயுதம் இல்லாத ஏவுகணையை கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் அளித்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து