முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் காங்கிஸ் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      இந்தியா      அரசியல்
karke 2023-08-10

மும்பை, மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் செய்தியாகளுக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன. நாங்கள் உழைத்துள்ளோம், இன்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம், இன்று தெரிந்து கொள்வோம். நான் இப்போது என்ன சொன்னாலும், அது ஒரு ஊகமாக இருக்கும்.

நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இங்கு (மகாராஷ்டிரம்) அல்லது ஜார்கண்ட் என ஒவ்வொரு மாநிலத்திலும் பல கூட்டங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றுள்ளேன். நாங்கள் (ஆட்சிக்கு) வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இங்கு ஆளும் பாஜக-சிவசேனை (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும்,

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில் (பெரும்பான்மை 41) ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியிடமிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு சில வாக்குக் கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. இரு மாநிலங்களிலும் நவ. 23-ஆம் தேதி(சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து