முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது திருவுருவ சிலையை தானே திறந்து வைத்த மே. வங்க கவர்னர்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
Ananda-Bose 2024-11-24

Source: provided

கொல்கத்தா : 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு வங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார்.  மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ராஜ் பவனில் தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்பவனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு தனது திருவுருவ சிலை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. 

தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்ததை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது தொடர்பாக  திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், 

நம் கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் அவரது சிலையை திறந்து வைத்துள்ளார். அவருக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளார். அவர் தனது சிலைக்கு மாலை அணிவிப்பாரா? இது தன்னை தானே உயர்வாக நினைக்கும் மனப்பான்மை என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து