முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஐ.பி.எல். மெகா ஏலம்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      விளையாட்டு
ICC 2023 06 24

Source: provided

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலம் இன்று (நவம்பர் 24) மற்றும் நாளை (நவம்பர் 25) சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கவுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று தொடங்கவுள்ள நிலையில், மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த்தின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து, அவர் மிகவும் சிறப்பான பண்புகளைக் கொண்டவர். அவர் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தும் பண்புகளைக் கொண்டுள்ளார். அதனால், எந்த ஒரு அணி உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறேன் என்றார். 

________________________________________________________________________________

திலக் வர்மா சாதனை 

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு, பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் திலக் வர்மா தலைமையிலான ஐதராபாத் அணி, மேகாலயாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மேகாலயா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவி 4 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 151 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மேகாலயா 69 ரன்களில் ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இந்த சதம் திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அடித்த 3-வது சதமாகும். ஏற்கனவே கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் (4 போட்டிகள்) இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர் கடைசி 2 போட்டிகளில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் (உள்ளூர் & சர்வதேசம்) தொடர்ச்சியாக 3 சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

________________________________________________________________________________

ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் அரை சதமடித்தனர் . இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்திருந்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் சீண்டினார். ஸ்டார்க் பந்துவீசிய பிறகு அவரை பார்த்து 'உங்களது பந்து மிக மெதுவாகவருகிறது' என ஜெய்ஸ்வால் நக்கலாக தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

________________________________________________________________________________

மீண்டும் கோபமடைந்த காம்பீர்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து முதல் நாள் முடிவில் ஆஸி. அணி 67/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது, உணவு இடைவேளை வரை விளையாடிய ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 100க்கு அதிகமான பந்துகள் விளையாடினார். 67/7 என்றிருந்த ரன்னிலிருந்து 104க்கு கொண்டு சென்றார்.

பும்ரா பந்துவீசிக்கொண்டிருந்தபோது காமிராவில் காட்டப்பட்ட இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கோபமாக தனது தொப்பியை தூக்கி வீசினார். ஏற்கனவே, நியூசிலாந்திடம் வரலாற்று தோல்வியை சந்தித்தபோது திமிராக பேசியது சர்ச்சையானது. முன்னாள் வீரர்கள் பலரும் கம்பீரை அமைதியாக இருக்கும்படிக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிப் பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்தத் தொடரில் தோல்வியுற்றால் அவரது பயிற்சியாளர் பதவி பறிபோகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து