முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
Hemant-Soran 2024-07-08

Source: provided

ராஞ்சி : சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நாளை ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் 20-ம் தேதியும் நடைபெற்றது. 

ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின. ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்களாக களமிறங்கினர். 

இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த  சூழலில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன.  மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. 

இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்கள் பெற்றன. அதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. 

இதில் பா.ஜ.க. 21 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன. இதைத் தவிர ஜார்கண்ட் ஜனநாயக புரட்சிகர முன்னணி ஒரு தொகுதியை கைப்பற்றியது.

இதனிடையே பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர்  ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். காண்டே தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவி கல்பனா சோரன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தும்கா தொகுதியில் போட்டியிட்ட அவரது சகோதரர் பசந்த் சோரன் 14 ஆயிரத்து 588 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நாளை முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நாளை 26-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இண்டியா  கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து