முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      விளையாட்டு
INDIA-1 2024-10-23

Source: provided

ஷார்ஜா : ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி காலிறுதியில் யூ.ஏ.இ.யை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

யூ.ஏ.இ. பேட்டிங் தேர்வு...

11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குருப் ஏ பிரிவில்  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் ஆயன் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

143 ரன்கள் எடுத்து...

இதனால் 44 ஓவரில் 137 ரன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 70 ரன்னும் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

லீக் ஆட்டங்களில்...

முன்னதாக 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும், 2வது ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக வெற்றியும் கண்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - யு.ஏ.இ அணிகள் மோதின. இதில் வெற்றிப்பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து