முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டப்பாங்குத்து விமர்சனம்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      சினிமா
Dabangtu-review 2024-12-09

Source: provided

மதுரையைச் சேர்ந்த நாயகன் சங்கரபாண்டி சொந்தமாக தெருக்கூத்து குழு ஒன்றை நடத்தி வருகிறார். அப்பா யார் என்று தெரியாமல், அம்மா வேறு ஒரு நபருடன் ஓடிவிட்டார் என்ற அவப்பெயருடன் இருக்கும் நாயகி தீப்தி, நாயகனின் குழுவில் இணைந்து நடனமாட ஆசைப்படுகிறார்.

ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் வில்லனான சைக்கிள் மாமா. நாயகனும், நாயகியும் காதலித்தாலும், தனது அம்மா யார் என்று கண்டுபிடித்து, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பிறகே திருமணம் என்பதில் நாயகி உறுதியாக இருக்கிறார். நாயகியின் அம்மாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் ஈடுபட, அவர்களது திருமணம் நடந்ததா? இல்லையா என்பதற்கான விடையே டப்பாங்குத்து படம்.

மதுரையைச் சுற்றி நடக்கும் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை. முழுக்க முழுக்க பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் நிரம்பியிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களில் அசத்திய நாயகன் சங்கரபாண்டி, முதல் படத்திலேயே நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

நாயகி தீப்தியின் நடனமும் நடிப்பும் அருமை.  தெருக்கூத்து கலைகளை மையப்படுத்திய படம் என்பதால், அதன் மூலமாகவே கதை சொல்லியிருக்கும் இயக்குநர் முத்துவீராவின் முயற்சியை பாராட்டலாம். மொத்தத்தில், ‘டப்பாங்குத்து’ தெருக்கூத்து கலைகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து