முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
karthik-chidambaram 2024-12-24

Source: provided

சிவகங்கை: அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்காது என்ற மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எப்படி செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் திரித்துக்கூற காங்கிரசுக்கு அவசியம் இல்லை.

பாராளுமன்றத்தில் அமித்ஷா பேசியது முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள டி.வி.யிலும் இது பதிவாகி உள்ளது. அதை பார்த்தாலே அவர் சொன்னது தெரியும். அவர் என்ன பேசினார் என்பது காங்கிரசுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே புரியும். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை அல்ல. மனித உரிமை பிரச்சினை. எனவே மத்திய அமைச்சர் அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும்.

தமிழக கவர்னர் வடகிழக்கு மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்டார். அரசியல் சாசன கோட்டின் எல்லையை அவர் மீறிக்கொண்டே இருக்கிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு உள்ளது. அப்படி இருந்தும் அரசை கவர்னர் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால் அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் போக்கு தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து