முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா..? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      தமிழகம்
jayakumar 2024-12-24

Source: provided

சென்னை: எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா என்று அண்ணாமலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை மெரினாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். எல்லோரும் போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்.மதத்தால் பிரிவினை செய்கிறது பா.ஜ.க.. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பா.ஜ.க. இருக்கிறது. 

பா.ஜ.க.வைபோல் எம்.ஜி.ஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை. சாதி,மதம், இனத்தை கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கம் அதிமுக. எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என்றார். மோடியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து