முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-வது பிறந்தநாள்: வாஜ்பாயின் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      இந்தியா
PM-Modi-2024-1225

புதுடெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. முன்னதாக டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மக்களவைத்தலைவர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு நடந்த இசையஞ்சலி நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது அனைவராலும் போற்றப்படும், தங்க நாற்கர சாலை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. குமரி முதல் காஷ்மீர் வரை உருவான சாலை பெரும் பயனுள்ளதாக அமைந்தது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் சார்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டு ஆகும் 2047-ன் அம்ரித் கால் நோக்கத்திற்கு வாஜ்பாயின் அர்ப்பணிப்பு மற்றும் அவரின் தூய்மையான பணி உத்வேகமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து